News March 28, 2025

தஞ்சையில் இன்று எஸ்எஸ்எல்சி பொது தேர்வுகள் 

image

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வெள்ளி) தொடங்கி (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று தமிழ் தேர்வு காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் இந்த தேர்வினை 136 மையங்களில் 30,017 மாணவர், மாணவிகள் எழுதுகிறார்கள். இதில் 14,409 மாணவர்களும், 15,108 மாணவிகளும் அடங்குவர். தனித்தேர்வர்கள் 500 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

Similar News

News November 1, 2025

தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

image

பேரரசர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு இன்று (நவ.,01) ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். சதய விழா நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தகவலை ஷேர் பண்ணுங்க.

News November 1, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

1040 பரத கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மேயர்

image

தஞ்சாவூர் பெத்த அண்ணன் கலையரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்களின் 1040 சதய விழாவை முன்னிட்டு இன்று (அக்.31) வெள்ளிக்கிழமை 1040 பரத கலைஞர்களின் மாபெரும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற பரத கலைஞர்களை மேயர் சண். இராமநாதன் அவர்கள் பாராட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

error: Content is protected !!