News March 28, 2025
அணிவகுத்து நிற்கும் கனரக லாரிகள்

தென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள குவாரிகளிலிருந்து நாள்தோறும் கனரக லாரிகள் மூலம் அரசின் விதிமுறைகளை மீறி கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. லாரியில் செல்லும் வழியில் கடையம் அருகே முதலியார்பட்டி ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் ரயிலுக்காக மூடப்படும் போது லாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து அணிவகுத்து வரிசையாக செல்வதால் மற்ற வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
Similar News
News November 20, 2025
தென்காசியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது: தென்காசி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் நாளை (நவம்பர் 21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இதனால் சில இடங்களில் மழை தீவிரம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
News November 20, 2025
தென்காசி: 5,810 காலியிடங்கள்., மீண்டும் ஒரு வாய்ப்பு APPLY

தென்காசி மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன.இதற்கு நவ. 20 (இன்று) கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News November 20, 2025
பொது மக்களுக்கு மின்வாரியம் முக்கிய வேண்டுகோள்

மின்வாரியம் சார்பில் இன்று விடுத்துள்ள அறிவிப்பு; தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழை பெய்கிறது மழை. நேரங்களில் மின்சாதனங்களை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும். வீடுகளில் மின்சாதனங்கள் சூழ்ச்சிகளை இயக்கும்போது எக்காரணம் கொண்டும் ஈரக் கைகளால் தொடக்கூடாது பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.


