News March 28, 2025
BREAKING: நிலநடுக்கத்தால் பாங்காக்கில் அவசரநிலை

நிலநடுக்கத்தால் தாய்லாந்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாங்காக்கில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதனால், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News April 2, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 224 ▶குறள்: இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு. ▶பொருள்: ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.
News April 2, 2025
துப்புறவு பணியாளர்களுக்கு ₹33.88 கோடி வரி

மாதம் ₹15,000 வருமானம் ஈட்டும் உ.பியைச் சேர்ந்த துப்புறவு பணியாளர் கரண் குமாரை, ₹33.88 கோடி வரி செலுத்த சொல்லி IT நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 10 நாள்களில் நடக்கும் 3ஆவது சம்பவம் இதுவாகும். முன்னதாக, ஒரு ஜூஸ் விற்பனையாளருக்கு ₹7.54 கோடி, பூட்டு தொழிலாளிக்கு ₹11.11 கோடி வரி கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. PAN தரவுகள் மோசடியாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
News April 2, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் – 02 ▶பங்குனி – 19 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 12:30 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: சித்திரை ▶நட்சத்திரம் : கார்த்திகை ம 1.51