News April 2, 2024
களத்தில் இறங்கி வாக்கு சேகரித்த ஈபிஎஸ்

மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக்கூட்டங்கள் மட்டுமின்றி களத்தில் இறங்கி பொதுமக்களிடம் நேரடியாகவும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திருவண்ணாமலை அதிமுக வேட்பாளர் கலியபெருமாளுக்கு ஆதரவாக திருப்பத்தூரில் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.
Similar News
News January 20, 2026
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. மகிழ்ச்சியான செய்தி

குலவிளக்கு திட்டத்தின் கீழ் மகளிருக்கு ₹2,000 வழங்கப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்ததில் இருந்தே, திமுக பரபரப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விரைவில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு, தேர்தலுக்கு முன்பே வழங்கிட திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, விரைவில் இனிப்பான செய்தி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 20, 2026
நான் லவ் பண்ணலங்க: ருக்மிணி வசந்த்

நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ருக்மிணி வசந்த் காதலில் இருப்பதாக SM-ல் தகவல்கள் பரவி வந்தன. இளைஞர் ஒருவருடன் இருக்கும் புகைப்படமும் வைரலானது. இந்நிலையில் இதை மறுத்துள்ள ருக்மிணி, நண்பர்களுடன் இருந்த புகைப்படங்களை வைத்து சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாக கூறியுள்ளார். தான் இப்போது வரை காதலில் இல்லை என்றும், காதல் வந்தால் நிச்சயம் ரசிகர்களுக்கு சொல்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News January 20, 2026
BREAKING: தமிழக அரசு உயர்த்தி அறிவிப்பு

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் (PHC) பணியாற்றிவரும் பேறுகால தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ₹1,500 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதனை ₹7,367 ஆக உயர்த்தி, அதற்கான ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். ஏற்கெனவே 978 பேருக்கு PHC-ல் மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 1,575 பேருக்கும் பணியிடங்கள் காலியாகும் போது பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.


