News March 28, 2025

நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கம்

image

சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, இன்று (மார்.28) நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனைக்கும், விமான நிலையத்திற்கு கடைசி மெட்ரோ இயக்கப்படும். ஐ.பி.எல். போட்டி நடப்பதையொட்டி, மெட்ரோ ரயிலில் ரசிகர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 18, 2025

ஸ்தம்பித்தது சென்னை

image

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னையில் இருந்து நேற்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இதனால் சென்னை கிளாம்பாக்கம், மாமண்டூர் பாலம், சிங்கம்பெருமாள் கோவில் உள்பட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சுமார் 2 கிலோமீட்டர் வரை அணிவகுத்து நின்றதால் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. *இதுகுறித்து உங்க கருத்து என்ன*

News October 18, 2025

சென்னை: இரவு ரோந்து பணி போலீசாரின் விவரம்

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (17.10.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*

News October 17, 2025

சட்டமன்றத்திற்கு அல்வா கொண்டு வந்த உறுப்பினர்கள்

image

கடந்த சில நாட்களாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில், இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஆளுங்கட்சி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த வந்தார். அந்த வகையில் இன்று மின்சார கட்டணம் குறித்து, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் வகையில் , திமுக உருட்டு கடை அல்வா, மாதாந்திர மின் கட்டணம் என்ற வசனங்களோடு அதிமுக MLA அல்வா கொண்டு வந்தனர்.

error: Content is protected !!