News March 28, 2025
டெக்னீஷியன் பயிற்சி: ரூ.20,000 சம்பளத்தில் வேலை

பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
Similar News
News August 25, 2025
திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

2025-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வருகின்ற 26.08.2025 முதல் 12.09.2025 திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளன. மேலும் நீச்சல் போட்டியானது 27.08.2025 அன்று நடைபெறவிருந்த போட்டியானது வருகின்ற 04.09.2025 அன்று காலை 6.00 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
திருவள்ளூர் மக்களே இந்த நம்பர் உங்க கிட்ட இருக்கா?

அரசு மருத்துவ மனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<17511472>>தொடர்ச்சி<<>>
News August 25, 2025
புகார் எண் 104ன் சேவைகள்

104 எண் மூலம் தரமற்ற சேவை தரும் மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், ஓட்டல்கள் பற்றியும் புகார் செய்யலாம். மேலும் உடல் நலம் சார்ந்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் இங்குள்ள மருத்துவர்களை தொடர்பு கொண்டு பேசலாம். மருத்துவத்துறையில் மகப்பேறு, இருதயம், நீரிழிவு, காது மூக்கு தொண்டை, குடல்இறப்பை, தோல் மருத்துவபிரிவுகளைச் சேர்ந்த 20 மருத்துவ நிபுணர்கள் 24 மணிநேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். ஷேர் பண்ணுங்க