News March 28, 2025
பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்

எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், 3 அமைச்சர்கள் இன்று பதிலுரை வழங்கவிருப்பதால் இபிஎஸ்ஸை பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அப்பாவு கூறினார். ஆனாலும், துணை முதல்வர் உதயநிதி பேசியபோது தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்.எல்.ஏக்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News April 4, 2025
மாதம் 50,000 பேருக்கு பட்டா: அமைச்சர்

மாதம் 50,000 பேருக்கு பட்டா என்ற அளவில், வரும் டிசம்பருக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். தற்காலிகமாக நிறுத்தப்பட்ட முதியோர் ஓய்வூதியத் திட்டம், தற்போது மீண்டும் செயல்பாட்டில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அரசின் திட்டங்கள் மக்களை விரைவாக சென்றடைய 50 புதிய வருவாய் குறுவட்டங்களும், 25 புதிய வருவாய் கிராமங்களும் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News April 4, 2025
இ-சேவை மையங்களில் டிக்கெட் புக்கிங்

கிராமப்புற மக்கள் தொலைதூர பயணங்களுக்கு முன்பதிவு செய்ய வசதியாக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இ-சேவை மையங்களில் புக்கிங் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்பதிவு செய்த டிக்கெட்களை கேன்சல் செய்யவும் இ-சேவை மையங்களை அணுகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஆன்லைன் மூலமாகவும், அங்கீகரிக்கப்பட்ட செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து மக்கள் பயணித்து வருகின்றனர்.
News April 4, 2025
இனி இதற்கு கட்டணம் இல்லை: அமைச்சர்

PPF கணக்கில் வாரிசுதாரரை சேர்க்கவும், புதுப்பிக்கவும் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதிபட தெரிவித்துள்ளார். நிதி நிறுவனங்கள் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து தனக்கு தெரியவந்ததாகவும், எனவே, விதிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும் பிரிவை நீக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இது கடந்த 2ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.