News March 28, 2025
பிரபல ஹாலிவுட் நடிகர் கிளைவ் ரெவில் காலமானார்

ஹாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர் கிளைவ் ரெவில் (94) உடல் நலக்குறைவால் காலமானார். நியூசிலாந்தைச் சேர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக Dementia (மறதி நோய்) நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தி அனிமேஷன் சீரிஸ் மற்றும் ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரங்களில் தனது காந்த குரலால் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்ற கிளைவ் ரெவில் குரல் ஓய்ந்த நிலையில், பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
Similar News
News April 2, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் – 02 ▶பங்குனி – 19 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 12:30 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: சித்திரை ▶நட்சத்திரம் : கார்த்திகை ம 1.51
News April 2, 2025
பாஜக தேசிய தலைவர் யார்?

பாஜகவின் புதிய தேசிய தலைவர் பற்றிய அறிவிப்பு இம்மாதம் 3ஆவது வாரம் வெளியாகும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 4ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கான புதிய தலைவர் அறிவிக்கப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 2019ல் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நட்டாவின் பதவிகாலம், 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு நீட்டிக்கப்பட்டது.
News April 2, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 02) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!