News March 28, 2025
ஆன்லைனில் IPL டிக்கெட் வாங்குறீங்களா..

எப்படியாவது IPL போட்டியை நேரில் பார்க்கணும் என்ற ரசிகர்களின் ஆசையை சில விஷமிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கொல்கத்தாவை சேர்ந்த 32 வயது பெண், இன்ஸ்டாவில் IPL டிக்கெட் விளம்பரத்தை பார்க்கிறார். பின் அவர்களை போனில் தொடர்பு கொள்ள, மெயில் மூலம் டிக்கெட் கன்ஃபார்ம் ஆனதாக கூறி, ₹12,000 கேட்கிறார்கள். யோசிக்காமல் ஆன்லைனில் பணத்தை அனுப்ப, பின்னரே ஏமாந்ததை அவர் உணர்ந்துள்ளார் . உஷாரா இருங்க!
Similar News
News April 11, 2026
தமிழக தேர்தல்: தபால் வாக்குப்பதிவு தேதி மாற்றம்

காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்.17, 18-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது 18 மற்றும் 20-ம் தேதிக்கு மாற்றப்படுவதாக சென்னை காவல்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், இதுவரை 18,000 காவலர்களுக்கு தபால் வாக்குக்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 11, 2026
தோனி, ருதுராஜின் ஆர்டரை மாற்றுகிறதா CSK?

தோனி அணியில் இணைந்தாலும், இம்பேக்ட் பிளேயராகவே களமிறங்குவார் என கூறப்படுகிறது. ஏனெனில், பிளேயிங் 11-ல் மாற்றங்கள் வேண்டாம் என CSK உறுதியாக உள்ளதாம். அதேபோல், ருதுராஜை 3-ம் இடத்தில் இறக்கி, சஞ்சு – ஆயுஷை ஓபனிங் ஆடவிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். இதற்கு ருதுராஜின் மோசமான ஆட்டமே காரணம் என்று கூறப்படுகிறது. இன்றைய DC-க்கு எதிரான போட்டியில் இவர்களின் செயல்பாட்டை பொறுத்து முடிவு எட்டப்படுமாம்.
News April 11, 2026
ஈரானுக்கு புதிய தலைவலி

ஹார்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாக திறக்காதது குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. போரின் ஆரம்ப கட்டத்தில் ஈரான் கடற்படை, ஹார்முஸ் நீரிணை முழுவதும் கண்ணிவெடிகளை புதைத்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த கண்ணிவெடிகளை கண்காணிப்பது கடினமாகிவிட்டதாகவும், அவற்றை அகற்றும் திறன் ஈரானிடம் தற்போது இல்லை எனவும் அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. கண்ணிவெடிகளை புதைப்பதை விட அவற்றை அகற்ற அதிக செலவு ஆகுமாம்.


