News March 28, 2025
கோவில்பட்டியில் கனிமொழி எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய ரூ.4,034 கோடி நிலுவையில் உள்ளது. இதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் நாளை(மார்ச் 29) 46 ஊரக ஒன்றிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கோவில்பட்டி ஒன்றியத்தில் தூத்துக்குடி எம்பி கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வடக்கு மாவட்ட திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 2, 2026
தூத்துக்குடியில் 3 போலீசார் சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பதவி ஏற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், குளத்தூர், முத்தையாபுரம் காவல் நிலையங்களில் மது போதையில் இருந்ததாக அண்ணாதுரை, உலகநாதன், தனுஷ்கோடி ஆகிய 3 போலீசாரை எஸ்பி சிலம்பரசன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
News February 2, 2026
தூத்துக்குடி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500
ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இதனை ஷேர் பண்ணுங்க!
News February 2, 2026
தூத்துக்குடி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

தமிழ்நாடு தனியார் வேலை இணையத்தில் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் Field Technician – Air Conditioner பிரிவில் 25 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.25,000 – ரூ.50,000 வரை ஊதியமாக வழங்கப்படும் நிலையில் 18-28 வயதிற்குட்பட்ட ஆண்கள் <


