News March 28, 2025
திருச்சியில் ஓராண்டில் 8 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை

திருச்சி மாநகரத்தில் மக்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கும், தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் நாய்களுக்கான 4 கருத்தடை மையங்கள் மூலம், நடப்பு 2024-25 நிதியாண்டில், 8 ஆயிரத்து 345 தெரு நாய்களுக்கு ரூ.1.38 கோடி செலவில் கருத்தடை செய்யப்பட்டு, ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
திருச்சி பெண் கொலை: ஆயுள் தண்டனை உறுதி

திருவெறும்பூரை சேர்ந்த முத்துலட்சுமி என்ற கொலை செய்யப்பட்ட வழக்கில், ரேவதி என்பவருக்கு திருச்சி மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இதனை ரத்து செய்யக்கோரி ரேவதி மதுரை நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கொலை நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு வழங்கிய ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என தீர்ப்பளித்தனர்.
News November 5, 2025
திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களில் தொழில் பழகுநர்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக, திருவெறும்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 10ம் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது குறித்த விவரங்களுக்கு 0431-2553314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
திருச்சி: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 11 பேருக்கு பணியிட மாற்றமும், மாவட்ட கல்வி அலுவலர்கள் 26 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் நாகை மாவட்ட முதன்மை தொடக்க கல்வி அலுவலராகவும், திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் பேபி தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் பணியிட மாறுதலுடன் கூடிய பதவி உயர்வு பெற்றுள்ளனர்.


