News March 28, 2025
கொலை வழக்கில் சிக்கிய திருவாரூர் நபர்

சிதம்பரம் அம்மாபேட்டையில் நேற்று முன்தினம் இரவு, ஒரு வீட்டில் திருட முயன்றபோது வீட்டின் உரிமையாளர் கத்தியால் வெட்டப்பட்டார். அதுகுறித்த விசாரணையில் திருவாரூர், நன்னிலம் முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்த கேசவன் (52) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் 2020இல் அம்மாபேட்டை பகுதியில், நடராஜன் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
Similar News
News November 13, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 12, 2025
திருவாரூர்: விவசாயிகள் வங்கி கணக்கில் 704 கோடி ரூபாய்

திருவாரூர் மாவட்டம், குறுவை நெல் சாகுபடியில் இதுவரை தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 258573 மெட்ரிக் டன் நெல் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் வங்கி கணக்கு நேரடியாக 704 கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு 37 ஆயிரத்து 956 விவசாயிகள் பயனடைந்துள்ளதாக, மாவட்ட ஆட்சியரகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
திருவாரூர்: சீமாட்டி ஜவுளி நிறுவனத்தில் வேலை!

திருவாரூர் நகரில் அமைந்துள்ள சீமாட்டி ஜவுளி நிறுவனத்தில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12-ம் வகுப்பு முடித்த, ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.14,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <


