News March 28, 2025
தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம்

தவெகவின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுவதையொட்டி, அக்கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர். காலை 9 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில், விஜய் பங்கேற்கிறார். இதில், மத்திய – மாநில அரசுகளை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. தேர்தல் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் விஜய், சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளதாக தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
Similar News
News April 2, 2025
உங்களுக்கு 40 வயது ஆகிறதா?

40 வயதானவர்களின் எலும்புகள் அடர்த்தியை இழந்து தேய்மானம் அடைகின்றன. எனவே முதுமை வரை வலிமையான எலும்பை பெற பால், தயிர், கீரைகள், பாதாம், மீன், முட்டை மஞ்சள் கருக்கள் என கால்சியம், வைட்டமின் டி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். நடைபயிற்சி, ரன்னிங் மேற்கொள்ளுங்கள். புரதம் நிறைந்த இறைச்சி, முட்டை, பீன்ஸ், பயறு மற்றும் நட்ஸ் வகைகளை உட்கொள்ளுங்கள். புகைப்பிடித்தல், மதுபழக்கத்தை கைவிடுங்கள்.
News April 2, 2025
பண்ட்டுக்கும் ராகுல் ட்ரீட்மெண்ட்

கடந்த ஐபிஎல் சீசனில் கே.எல்.ராகுலின் கேப்டன்ஸி சொதப்பியதால், LSG ஓனர் சஞ்சீவ் கோயங்கா அவருடன் பொதுவெளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோன்று, பஞ்சாப் அணியுடனான நேற்றைய போட்டியில் LSG தோற்றதால், அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டை, சஞ்சீவ் பொதுவெளியில் கடிந்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ரிஷப் பண்ட் ட்ரெண்டிங்கிலும் உள்ளார்.
News April 2, 2025
75 ஆண்டு கால உறவு.. வாழ்த்து கூறிய சீன அதிபர்

இந்தியா- சீனா இடையிலான ராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் முர்முவுக்கு சீன அதிபர் ஜின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அதில், இருதரப்பு உறவுகள் டிராகன்- யானை நடன வடிவத்தை எடுக்கவும், நீண்டகால கண்ணோட்டத்தில் இருந்து இருதரப்பு உறவுகளை கையாளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பொதுவான வளர்ச்சியை உறுதிசெய்ய இருநாடுகளும் இணைந்து செயல்படவும் கேட்டுக்கொண்டார்.