News March 28, 2025
போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை

ராணிப்பேட்டை மாவட்டம் பெருமூச்சி கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்(30). இவர் சிறுமி பாலியல் வழக்கில் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கை விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட மோகன்ராஜ்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.12,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.
Similar News
News August 25, 2025
இராணிபேட்டை மக்களே.. லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க.!

இராணிப்பேட்டை மக்களே.. சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் கண்டிப்பாக ஒரு முறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27667070) என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 25, 2025
அரக்கோணத்தில் அதிமுகவினர் கைது

அரக்கோணத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியை கண்டித்து இன்று (ஆக.25) தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சு.ரவி எம்எல்ஏ தலைமையில் 150க்கும் மேற்பட்ட அதிமுகவினர் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
News August 25, 2025
ராணிப்பேட்டை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள். (<<17512847>>தொடர்ச்சி<<>>)