News March 28, 2025
ஈரோடு மக்களே வெளியே செல்லாதீங்க

தமிழகத்தில் இயல்பை விட 2-3 டிகிரி கூடுதலாக வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாக இருக்கிறது. அவ்வகையில் ஈரோட்டில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி வெயில் பதிவாகியுள்ளது. ▶ காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்லாதீங்க. உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News September 14, 2025
ஈரோட்டில் ரூ.48 கோடியில் பணிகள்

ஈரோட்டில் மாநில நெடுஞ்சாலையாக இருந்த வெள்ளகோவில் ரோட்டை வெள்ளகோவில் – சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. மேலும், தற்போது வெள்ளகோவில் – சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் சின்னியம்பாளையம் முதல் நொய்யல் ஆற்று பாலம் வரை ரூ.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
News September 14, 2025
பர்கூர் மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தம்

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் வட்டம், கொள்ளேகால் செல்லம்பாளையம் சாலையில் நால்ரோடு முதல் கர்கேகண்டி வரை சாலை புனரமைப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், சாம்ராஜ்நகர், கூடுதல் துணை ஆணையாளரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதால், 15.09 முதல் 25.09 வரை 6 சக்கரங்களுக்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் பர்கூர் மலைப்பாதையில் சொல்லாமல் திம்பம் மலைப்பாதை வழியாக செல்லுமாறு ஈரோடு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News September 13, 2025
ஈரோடு: கள்ள சாராயம் காய்ச்சிய திமுக கவுன்சிலர் கைது

ஈரோடு, காஞ்சிக்கோவிலில் விவசாயத் தோட்டத்தில், சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சியதாக, பெத்தாம்பாளையம் பேரூராட்சி 3வது வார்டு திமுக கவுன்சிலர் சுரேஷ்குமார், அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி என்ற இருவரையும், ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும் 12 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், 150லி ஊரலை அழித்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.