News March 28, 2025
புலி தாக்கி உயிரிழப்பு: 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

நீலகிரி, கவர்னர் சோலை பகுதியில் உள்ள கொல்லகோடு மந்தையைச் சேர்ந்த கேந்தர் குட்டன் என்பவர் நேற்று புலி தாக்கி உயிரிழந்தார். இந்தநிலையில் உயிரிழந்த கேந்தர் குட்டன் குடும்பத்திற்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.10 லட்சம் நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இதற்கான காசோலையை ந்தர் குட்டன் குடும்பத்திற்கு வனத்துறையினர் வழங்கினர்.
Similar News
News January 10, 2026
நீலகிரியில் சுற்றுலாப் பேருந்துக்கு அபராதம்

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் போன்ற பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டிக்கு, ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த பேருந்தில் நேற்று நகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பேருந்தில் 819 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் பேருந்தில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்துக்கு ரூ.40,000 அபராதம் விதித்தனர்.
News January 10, 2026
நீலகிரி: மின்தடையா? உடனே CALL

நீலகிரி மக்களே, மழை நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். உடனே TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்வார். மேலும், வாட்ஸ்அப் எண் ஆனா 94458-50811 என்ற எண்ணில் புகார் செய்யலாம். (SHARE)
News January 10, 2026
நீலகிரி: B.E, B.tech போதும்.. ரூ.65,500 சம்பளத்தில் வேலை

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)


