News March 28, 2025
வனத்துறை அமைச்சர் பொன்முடி குறும்படத்தை வெளியிட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி திண்டுக்கல் மாவட்டம், காசம்பட்டி கிராமத்தில் 4.97 ஹெக்டேர் அளவிலான பகுதி பல்லுயிர் பாரம்பரிய தலமாக (Bio diversity Heritage Site) அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது தொடர்பான குறும்படத்தை வெளியிட்டார். இந்நிகழ்வின்போது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்
Similar News
News November 5, 2025
சென்னை மாவட்டத்தில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 6:30 வரை தாலுகா வாரியாக அயனாவரம் -13, எழும்பூர் – 10.2, கிண்டி -13.2, மயிலாப்பூர் – 8.4, பெரம்பூர் – 12.3, மாம்பலம் 0, புரசைவாக்கம் 0.2, தண்டையார்பேட்டை -1, ஆலந்தூர் -29.5, அம்பத்தூர் – 5, சோழிங்கநல்லூர் – 10.4 மி.மீ பதிவாகியுள்ளது என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது
News November 5, 2025
சென்னை இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தொழிற்பயிற்சியில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 12th, சான்றிதழ் படிப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18-26 வரை இருக்கலாம். மாதம் ரூ.9,600-12,300 வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த <
News November 5, 2025
சென்னையில் முக்கிய தொடர்பு எண்கள்!

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க


