News March 28, 2025
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.

காஞ்சி மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் ஊராட்சியில் வியாழன் (27 மார்) தண்ணீர் பந்தலை காஞ்சி மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் அவர்கள் திறந்து வைத்தார். அருகில் வாலாஜா பா. கணேசன், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக கட்சி முன்னோடிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். திரளாகப் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Similar News
News April 23, 2025
குழந்தை பாக்கியம் தரும் சோமாஸ்கந்தர் சுவாமி

காஞ்சிபுரம் மாவட்டம் இளநகர் பகுதியில் உடையீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாளித்து வரும் சோமாஸ்கந்தர் சுவாமியை ம்னமுருகி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும், அங்குள்ள அம்பாளுக்கு பூஜைகள் செய்து வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும் எனவும் சொல்லப்படுகிறது.
குழந்தை இல்லாமல் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்..,
News April 23, 2025
காஞ்சிபுரம் பெயர் காரணம் உங்களுக்கு தெரியுமா?

காஞ்சிபுரம் பெயர் உருவானதற்கு அழகிய வரலாற்று காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது, கா என்றால் பிரம்மன் என்றும் அஞ்சித்தல் என்றால் பூசித்தல் என்றும் புரம் என்பதற்கு நகரம் என்றும் பொருள் கூறப்படுகிறது. பிரம்மன் பூசித்த நகரம் என்பதால் இதற்கு காஞ்சிபுரம் என பெயர் வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
உங்களைபோல் அனைவரும் தெரிந்துக்கொள்ள மற்றவர்களுக்கும் இதனை பகிருங்கள்..,
News April 23, 2025
பைக் மீது லாரி மோதி விபத்து: இருவர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் உண்ணாமலைப்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் ரஜினி (47), வெங்கடேசன்(37). கூலித்தொழிலாளா்களான இருவரும், உண்ணாமலைப்பாளையத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி பைக்கில் நேற்று (ஏப்ரல் 22) சென்று கொண்டிருந்தனா். அப்போது, கோவையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரி, பைக் மீது மோதியது. இதில் ரஜினி, வெங்கடேசன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.