News April 2, 2024

இந்தியா இதுவரை கச்சத்தீவை திருப்பி கேட்கவில்லை

image

கச்சத்தீவை திருப்பித் தருமாறு இந்தியா இதுவரை எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி என்று திட்டவட்டமாக கூறிய அவர், இந்தியா கச்சத்தீவை திருப்பிக் கேட்டால் இலங்கை தக்க பதிலளிக்கும் என்றும் தெரிவித்தார். கச்சத்தீவை மீட்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக அண்ணாமலை கூறிய நிலையில், இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

Similar News

News October 31, 2025

9 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

image

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவது, சிறுகுற்றங்களுக்கு தண்டனைக்கு பதிலாக அபாரம் விதிப்பது உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இருமுறை நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட தமிழக நிதி நிர்வாக பொறுப்புடைமை சட்டத்திற்கும் கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார்.

News October 31, 2025

பிரபல நடிகர் மரணம்… சகோதரி பரபரப்பு தகவல்

image

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து, அவரின் சகோதரி ஸ்வேதா சிங் பரபரப்பான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார். சுஷாந்தின் மரணம் தற்கொலையல்ல, அவரை 2 பேர் சேர்ந்து கொலை செய்ததாக அமானுஷ்ய ஆய்வாளர்கள் இருவர் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுஷாந்தின் படுக்கைக்கும் ஃபேனுக்கும் இடையே உள்ள தொலைவை வைத்துப் பார்க்கையில், அவர் தூக்கு போட்டுக்கொள்ள வாய்ப்பே இல்லை என்கிறார்.

News October 31, 2025

ORSL விற்பனைக்கு தமிழக அரசு தடை

image

ORSL, ORSL PLUS, ORS FIT ஆகிய கரைசலை விற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இவற்றை குடித்தால் நோயின் தன்மை மேலும் தீவிரமாகும் என FSSAI தடை விதித்திருந்த நிலையில், அதை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. உலக பொது சுகாதார அமைப்பு பெயர் அச்சிடப்பட்ட ORS-ஐ மட்டுமே விற்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ORSL கரைசலை மருந்தகம், கடைகளில் இருந்து பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!