News March 27, 2025
சினிமாவில் நடிக்கும் கோலி?

மேலே உள்ள போட்டோவைப் பார்த்தும், என்னது கோலி சினிமாவில் நடிக்கிறாரா? என அதிர்ச்சியாக வேண்டாம். அது துருக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் டோகன் பே. Ertugrul எனும் துருக்கிய சீரிஸில் இருந்து புகைப்படம் ஒன்றை ஸ்னாப் அடித்து, பயனர் ஒருவர் பதிவிட சமூகவலைதளம் ஆடிப்போனது. முதலில் பலரும் இவரை கோலி என்றே நினைத்தனர். பின்னரே உண்மை தெரியவந்தது. இருவரின் முக ஒற்றுமை எப்படி இருக்கு? நீங்க சொல்லுங்க.
Similar News
News April 2, 2025
வக்ஃப் மசோதா: அவையை அதிரவைத்த எதிர்க்கட்சிகள்

வக்ஃப் வாரிய மசோதா மீதான விவாதத்தின்போது, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். திமுகவின் ஆர்.ராசா உள்ளிட்டோர் முழக்கமிட்டதை அடுத்து, தனது பேச்சை தொடர முடியவில்லை என ரிஜிஜு முறையிட்டார். அப்போது, எதிர்க்கட்சிகள் அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார். ஆனாலும், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
News April 2, 2025
நேரலையில் வருகிறார் நித்தியானந்தா…!

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா இறந்துவிட்டதாக பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அவர் நேரலையில் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நாளை(ஏப்.3) அதிகாலை 4.30 மணிக்கு நேரலையில் பேசவுள்ளதாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஜிப்லி டிசைனில் நித்தியானந்தாவின் புகைப்படத்தை பதிவிட்டு, அனைவரும் காத்திருந்த தருணம் இறுதியாக வந்துவிட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
News April 2, 2025
இவரும் உங்களின் மோட்டிவேஷன் தான்

ராஜஸ்தானின் சுனிதாவிற்கு 3 வயதில் திருமணம் நடக்கிறது. 5 வயதில், படிக்க வேண்டும் என அப்பாவிடம் கெஞ்ச, அவர் ஒருமனதாக ஒப்புக்கொள்கிறார். பகலில் வேலை, இரவில் படிப்பு என கஷ்டப்பட்டு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறுகிறார். 19 வயதில் தனது ஊரின் முதல் பெண் கான்ஸ்டபிளாக வருகிறார். சில காலத்திலேயே, கருப்பை புற்றுநோய் வருகிறது. அதையும் போராடி வென்று, இன்று ‘போலீஸ்வாலி தீதி’ என பலராலும் கொண்டாடப்படுகிறார்.