News March 27, 2025
இதெல்லாம் மார்ச் 31-க்குள் செய்ய வேண்டியவை!

புதுப்பிக்கப்பட்ட ITR படிவத்தை மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரியை சேமிக்க விரும்பினால் அதற்குள் சில முதலீடுகள் செய்து கொள்ளலாம். அதே போல், PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பதிவு செய்வதற்கும், பெண்கள், சிறுமிகள் மட்டுமே முதலீடு செய்யும் மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கும் அன்றைய தினமே கடைசி நாளாகும். Share It.
Similar News
News April 1, 2025
குரு பயணம்: ராஜயோகம் அடிக்கப் போகும் 3 ராசிகள்

ஜோதிட சாஸ்திரப் படி, குரு பகவான் வரும் மே 14-ம் தேதி மிதுன ராசிக்கு பெயர்கிறார். அதனால் பின்னர் நன்மைகள் பெறக்கூடிய ராசிகள்: *கும்பம்: தொழில்ரீதியான வெற்றி, அதிர்ஷ்டத்தின் ஆதரவு *தனுசு: புதிதாக வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு, நல்ல செய்தி தேடி வரும், ஆன்மிகத்தில் ஆர்வம் *மேஷம்: மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும், நிலம் தொடர்பான தொழிலில் முன்னேற்றம், வெளிநாட்டு நிதி ஆதாயங்கள் பெற வாய்ப்பு.
News April 1, 2025
Layoff: 600 ஊழியர்களை கழட்டிவிடும் சொமேட்டோ

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உணவு டெலிவரியில் ஏற்பட்ட மந்தநிலை மற்றும் அத்துறையில் செயற்கை நுண்ணறிவை(AI) ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மோசமான செயல்திறன் மற்றும் சரியான நேரத்தில் செயல்படாதது உள்ளிட்டவற்றை காரணமாகக் கூறி இந்த நடவடிக்கையில் சொமேட்டோ நிறுவனம் இறங்கியுள்ளதாம்.
News April 1, 2025
ம.பி.யில் 19 நகரங்களில் மது விற்பனைக்கு தடை

ம.பி.யில் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் உள்ள 19 நகரங்களில் மது விற்பனைக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், உஜ்ஜைன், ஓம்காரேஸ்வர் உள்ளிட்ட 19 நகரங்களில் மது விற்பனைக்கு ஏப்.1 முதல் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. அந்த நகரங்கள் அனைத்தும் புனிதமானவை, அவை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே இந்த முடிவு எடுக்க காரணம் என CM மோகன் யாதவ் கூறியுள்ளார்.