News April 2, 2024
வீடு புகுந்து 9 சவரன் நகை திருட்டு

பவுஞ்சூர் அருகே விழுதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன. இவர் வயலுக்குச் சென்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 சவரன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போனது. இது குறித்து அவர் அணைக்கட்டு காவல் நிலையத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.
Similar News
News August 15, 2025
செங்கல்பட்டு: உள்ளூரிலேயே 25,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில்Assembly Line Machine Setter பணிக்கான 40 காலிப்பணியிடங்கள் உள்ளது. பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசின் <
News August 15, 2025
தாம்பரம் மாநகராட்சியில் 19 அலுவலர்கள் பணியிட மாற்றம்

தாம்பரம் மாநகராட்சியில் பணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து, 5 மண்டலங்களில் பணியாற்றும் மேலாளர், கண்காணிப்பாளர்கள், நிர்வாக அலுவலர், உதவியாளர்கள், இளநிலை & வருவாய் உதவியாளர்கள், பதிவு எழுத்தர் உள்ளிட்ட 19 அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே முரளி மற்றும் ரமேஷ் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 15, 2025
நடுவானில் விமானத்தில் கோளாறு

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று (ஆக.14) 166 பயணிகளுடன் கோழிக்கோடு வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது இதையடுத்து அவசர அவசரமாக விமானம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நள்ளிரவு 12.10 மணியளவில் தரையிறக்கப்பட்டது. தற்போது விமானத்தின் கோளாறு சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று மாலை விமானம் கோழிக்கோடு புறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்