News March 27, 2025
நாகர்கோவில் – குருவாயூர் இடையே ரயில் நாளை ரத்து

நெய்யாற்றின் கரை பாறசாலை இடையே பாலம் வேலை நடைபெறுவதால் நாளை சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயில் நாகர்கோவில் டவுன் குருவாயூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. 29ஆம் தேதி குருவாயூர் – நாகர்கோவில் டவுன் இந்த ரெயில் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை செல்லும் என்று ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 11, 2025
குமரி: பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை

கன்னியாகுமரி அருகே உள்ள பொட்டல்குளம் லெட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (33). இவர் இன்று மதியம் லெட்சுமிபுரத்தில் மர்ம நபர்களால் நடுரோட்டில் கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற இக்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News July 11, 2025
ஊரக வேலை உறுதித் திட்ட குறை கேட்கும் முகாம்

குமரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு பணி புரியும் மாற்றுத்திறனாளிகள் திட்டம் தொடர்பான குறைகளை தீர்க்கும் பொருட்டு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முன்னிலையில் குறை கேட்கும் முகாம் நடைபெற உள்ளது. ஜூலை.15 அன்று பிற்பகல் 3 மணிக்கு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இம்முகாம் நடைபெறும் என ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 11, 2025
குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஜூலை.11) நீர்மட்ட விவரம் பேச்சிப்பாறை அணை 41.56 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 70.60 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 13.19 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 13.28 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 225 கனஅடி, பெருஞ்சாணிக்கு 24 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.