News March 27, 2025
கோர விபத்தில் 3 பேர் பலி

கவுஹாத்தியில் இன்று மாலை ஏற்பட்ட கோர விபத்தில், சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சோனாப்பூர் பகுதியில் மூன்று சக்கர வாகனம் டிரக் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில், மூன்று சக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். சாலையோரம் பல வாகனங்கள் அனுமதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
Similar News
News April 1, 2025
மாமியாருக்கு கண்ணீர் அஞ்சலி… மருமகன் கைது!

திருப்பத்தூர் அருகே உயிரோடு இருக்கும் மாமியாருக்கு இரங்கல் போஸ்டர் டிசைன் செய்து மனைவி, உறவினர்களுக்கு அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடேசனுடன் சண்டையிட்டு, அவரது மனைவி தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால், மனைவிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துவரும் அவர், தற்போது இந்த வேலையை பார்த்துள்ளார். மனைவி அளித்த புகாரில் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்.
News April 1, 2025
சிஎஸ்கே ஜெயிக்க இதை பண்ணணும்: சீக்கா டிப்ஸ்!

நடப்பு ஐபிஎல் சீசனை வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே, அடுத்த 2 போட்டிகளில் பரிதாபமாக தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில், ஜேமி ஓவர்டனுக்கு பதிலாக அணியில் கான்வே இடம் பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார். பவர்பிளே ஓவர்களில் அஸ்வின் பந்துவீசுவதை தவிர்க்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார். சீக்கா டிப்ஸ் பலன் அளிக்குமா?
News April 1, 2025
குரு பயணம்: ராஜயோகம் அடிக்கப் போகும் 3 ராசிகள்

ஜோதிட சாஸ்திரப் படி, குரு பகவான் வரும் மே 14-ம் தேதி மிதுன ராசிக்கு பெயர்கிறார். அதனால் பின்னர் நன்மைகள் பெறக்கூடிய ராசிகள்: *கும்பம்: தொழில்ரீதியான வெற்றி, அதிர்ஷ்டத்தின் ஆதரவு *தனுசு: புதிதாக வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு, நல்ல செய்தி தேடி வரும், ஆன்மிகத்தில் ஆர்வம் *மேஷம்: மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும், நிலம் தொடர்பான தொழிலில் முன்னேற்றம், வெளிநாட்டு நிதி ஆதாயங்கள் பெற வாய்ப்பு.