News March 27, 2025

சேலம் : பறிமுதல் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு 

image

சேலம் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட பொருட்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். வாகன அபராதத் தொகையினை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள முன்வராத காரணத்தால் 25 வாகனங்கள் மார்ச் 29 காலை 10.30 மணிக்கு சர்கார் கொல்லப்பட்டியில் உள்ள சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் பொது ஏலம் நடைபெறுகிறது.

Similar News

News April 17, 2025

சேலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் !

image

சேலம்: தலைவாசல் அரிமா சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து வருகிற ஏப்.27ஆம் தேதி காலை 8:00 மணி முதல் 1:00 மணி வரை தலைவாசல் மும்முடி யூனியன் ஆபீஸ் எதிரில் உள்ள அரிமா அரங்கத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க !

News April 17, 2025

சேலம்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கவனத்திற்கு !

image

சேலத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினைக் கொண்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலோ (அ) <>www.tnvelaivaaippu.gov.in <<>>விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

சேலம் மாணவிக்கு கத்திக்குத்து!

image

சேலத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த நபரை பிடித்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் திருமால் கல்லூரி மாணவியிடம் மற்றும் மாணவியை கொலை செய்ய முயற்சித்த மோகன பிரியன் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

error: Content is protected !!