News March 27, 2025
சேலத்தில் 41,456 மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்

தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு நாளை (28.03.2025) தொடங்க உள்ளது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 522 பள்ளிகளை சேர்ந்த 21,008 மாணவர்கள், 20,448 மாணவிகள் என மொத்தம் 41,456 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு மாவட்ட முழுவதும் 183 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Similar News
News September 14, 2025
சேலம் மக்களே இனி அலைய வேண்டாம்!

சேலம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News September 14, 2025
சேலம் கல்லூரி மாணவி விபரீத முடிவு!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா, சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்று முன் தினம் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அனிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்தபோது, அவர் 20 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 14, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு!

ரயில் தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் காரணமாக போத்தனூர்- மேட்டுப்பாளையம் மெமு ரயில் (66612), மேட்டுப்பாளையம்- போத்தனூர் மெமு ரயில் (66615) ஆகிய ரயில் சேவைகள் இன்று (செப்.14) முழுவதும் ரத்துச் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.