News March 27, 2025

3,000 ஆண்டுக்கு முந்தைய ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு

image

மத்திய தொல்லியல் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், ஆமூரில் நடக்கும் அகழாய்வில் கிடைத்த, 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமச்சின்னங்கள் வெளிப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஏற்கனவே, கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளும், பல்லவர், சோழர் கால கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. இப்பகுதியைச் சுற்றி ஆயிரக்கணக்கான இடங்களில் தொல்லியல் சின்னங்கள் கிடைக்கின்றன.

Similar News

News September 29, 2025

செங்கல்பட்டு: கடலில் மூழ்கிய அப்பா, மகள்கள்

image

மாமல்லபுரம் அருகேயுள்ள சூளரிக்காடு கடற்கரையில் நேற்று (செப்.28) மாலை சென்னை, அகரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனது மகள்களுடன் கடலில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ராட்சத அலையில் சிக்கி மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் வெங்கடேசன் உடல் கரை ஒதுங்கிய நிலையில் மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி ஆகியோரின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

News September 29, 2025

செங்கல்பட்டில் 4,713 பேர் ஆப்சென்ட்!

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் 645 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் நேற்று (செப்.28), தமிழகம் முழுவதும் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில், மேற்கண்ட தேர்விற்கு 15,504 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 56 தேர்வு மையங்கள் மாவட்ட நிர்வாகம் அமைத்திருந்தது. இதில் 4,713 பேர் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 28, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டில் இன்று (செப்.28) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!