News March 27, 2025
பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெற அடுக்க அடையாள எண் அவசியம்

நாகை மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசால் விவசாயிகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள எண்ணை பெறாத விவசாயிகள் மார்ச் 30ஆம் தேதி அடையாள எண்ணை பெற்றால் மட்டுமே தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு கிடைக்க பெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
நாகை: மீவர்களை விடுவிக்க கோரி தவெக சார்பில் போராட்டம்

நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 35 மீனவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி மின்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். இந்நிலையில், மீனவர்களை விடுவிக்க கோரியும். இலங்கை கடற்படை, தமிழக அரசை கண்டித்தும் தவெக சார்பில் நேற்று அவுரித்திடலில் போராட்டம் நடைபெற்றது. இதில், தவெக மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில், மாநில துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் கலந்து கொண்டார்.
News November 8, 2025
நாகை: கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம், கீழ்வேளூர், கீழையூர், வேதாரண்யம், தலைஞாயிறு, திருமருகல் ஆகிய பகுதிகளில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு நவம்பர் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 18 வயதிலிருந்து 34 வயது வரை உள்ளவர்கள், இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கல்விச்சான்று, சாதிச்சான்று மற்றும் முன்னுரிமைக்கான ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
நாகை: ரேசன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று (நவம்பர் 8) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. இந்த குறைதீர் கூட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகள் தொடர்பாக விண்ணப்பம் அளித்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


