News March 27, 2025

கடலூர்: அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்து மாணவி படுகாயம்

image

கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி படிக்கும் மாணவி தர்ஷினி இன்று (மார்ச்.27) மாலை கல்லூரி முடிந்ததும் அரசு பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர் பீச் சாலை தீயணைப்பு நிலையம் அருகே பேருந்தில் இருந்து மாணவி இறங்க முயன்றபோது, ஓட்டுனர் கவனக்குறைவுடன் பேருந்தை இயக்கியதில் மாணவி தர்ஷினி தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

Similar News

News November 5, 2025

கடலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் – புன்செய், கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர், ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவசமாக அந்த இடத்திற்கு பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். எனவே இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News November 5, 2025

கடலூர்: 9 ஹோட்டல்களுக்கு அபராதம்!

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று 86 சைவ மற்றும் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தரமற்ற கருப்பு மற்றும் வெள்ளை நிற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 9 உணவகங்களிலிருந்து 7.4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி அபராதமாக ரூ.12,000 விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News November 5, 2025

கடலூர்: வேன் மோதி கொத்தனார் பலி

image

நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் கொத்தனார் கோதண்டபாணி (60). இவர் நேற்று காலை தனது பைக்கில் கீழ் வடக்குத்து பகுதியில் சென்னை- கும்பகோணம் சாலையில் சென்ற போது, எதிரே வந்த வேன் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோதண்டபாணி கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!