News March 27, 2025
இலவச வேலைவாய்ப்பு திறன் பயிற்சி!

சேலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கைக்கடிகாரம் மற்றும் கடிகாரம் பழுதுபார்க்கும் 3 மாத கால இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. இப்பயிற்சிக்கு நேரடியாகவோ (அ) https://forms.gle/8Zf9r5Ne61x7CERW9 என்ற Google Form மூலமாகவோ வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News November 14, 2025
புனித பயணத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு!

சேலத்தில் இருந்து ஜெருசலம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பியகிறிஸ்தவர்களுக்கான மானிய தொகை நேரடியாக வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு www.bcmbcmw.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை வருகின்ற 28-02-2026ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
News November 14, 2025
சேலம்: அரசு தேர்வுக்கு சிறப்பு பேருந்துகள் ஆட்சியர்!

சேலம் சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஓமலூர், சங்ககிரி, மற்றும் வாழப்பாடி ஆகிய பகுதிகளில் வருகின்ற நவ.16ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணியாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.


