News March 27, 2025

செல்போன் டவர் அமைப்பதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி

image

தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அவரது நிலத்தில் செல்போன் டவர் அமைக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வந்த குறுந்தகவல் வந்துள்ளது. இதில் அவர் பல்வேறு கட்டணங்கள் கட்ட வேண்டும் எனக் கூறி ரூ.40 லட்சம் வரை கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்த போலீசார் முரளி கிருஷ்ணன் என்பவரை இன்று கைது செய்தனர். (SMS மோசடியில் விழிப்புணர்வுடன் செயல்பட பிறருக்கும் ஷேர் செய்யுவும்)

Similar News

News April 7, 2025

தூத்துக்குடி பார் கவுன்சிலில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

image

தூத்துக்குடி நீதிமன்ற பார் கவுன்சிலில் நடப்பு 2025-26ஆம் ஆண்டு பதவிக்காலத்துக்கான நிர்வாகிகள் தேர்தல் ஏப்.3 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. காலை 10 முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். இன்று மாலை மனுக்கள் பரிசீலனையும், 9ஆம் தேதி மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2025

தூத்துக்குடியில் அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 88 அங்கன்வாடி பணியாளர்கள், 44 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.

News April 7, 2025

தூத்துக்குடியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும், தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று(ஏப்.7) காலை 10 மணிக்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!