News March 27, 2025

SSLC தேர்வு: தூத்துக்குடியில் 21,994 மாணவர்கள் எழுதுகின்றனர்!

image

தமிழ்நாடு முழுவதும் நாளை(மார்ச் 28) SSLC தேர்வு தொடங்குகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தேர்வினை 21,994 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.

Similar News

News April 7, 2025

தூத்துக்குடி பார் கவுன்சிலில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

image

தூத்துக்குடி நீதிமன்ற பார் கவுன்சிலில் நடப்பு 2025-26ஆம் ஆண்டு பதவிக்காலத்துக்கான நிர்வாகிகள் தேர்தல் ஏப்.3 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. காலை 10 முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். இன்று மாலை மனுக்கள் பரிசீலனையும், 9ஆம் தேதி மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2025

தூத்துக்குடியில் அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 88 அங்கன்வாடி பணியாளர்கள், 44 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.

News April 7, 2025

தூத்துக்குடியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும், தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று(ஏப்.7) காலை 10 மணிக்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!