News March 27, 2025
புதுவை ஆரோவில்லில் ஐஐடி கேம்பஸ்

புதுவை ஆரோவில்லில் ஐஐடி மெட்ராஸ் தனது 4வது கேம்பஸை இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளதாக அதன் இயக்குநர் காமக்கோடி அறிவித்துள்ளார். ஆரோவில்லில் 20 ஏக்கர் பரப்பளவில் மின்சார வாகனங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த பூஜ்ஜிய-உமிழ்வு சோதனை மையம் அமைக்கப்படும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
Similar News
News April 1, 2025
பகுதி நேர வேலை வாய்ப்பு எனக்கூறி 2.35 லட்சம் மோசடி

புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன். இவரை டெலிகிராம் செயலியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், பகுதி நேர வேலைவாய்ப்பு உள்ளதாகவும், வீட்டிலிருந்தபடி சம்பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதை நம்பிய சபரிநாதன் மா்ம நபா் கூறியபடி ரூ.2.35 லட்சத்தை பல தவணைகளில் அனுப்பி ஏமாந்தார். அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
News April 1, 2025
புதுவை முன்னாள் முதல்வர் கைது

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் அமுதரசனை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் முதல்வர் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
News April 1, 2025
அரசு பள்ளிகள் இன்று திறப்பு 2025-26 கல்வி ஆண்டு துவக்கம்

புதுச்சேரியில் கடந்த 2024-25 கல்வி ஆண்டு முதல், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை நேற்றுடன் முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்று துவங்கும் பள்ளிகள் வரும் 30ஆம் தேதிவரை இயங்கும். மே 1ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு கோடை விடுமுறை விடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.