News April 2, 2024

கரூர்: சுட்டெரிக்கும் கோடை வெயில்

image

கரூர் மாடத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) பரமத்தியில் வெப்ப அளவு 104.36 °F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், பழச்சாறு போன்ற இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 15, 2025

கரூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

கரூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 15, 2025

கரூர்: ஐடிஐ-யில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

image

கரூர்: ஐ.டி.ஐ-யில் வரும் ஆக.31ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்ட அறிக்கையில், ‘கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி சேர்க்கை நடந்து வருகிறது. மாதந்தோறும் உதவித்தொகை, இலவச பஸ் கட்டண சலுகை, சைக்கிள், வரைபடக்கருவிகள், பாட புத்தகங்கள், சீருடை, காலணி ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்படும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News August 15, 2025

கரூர் ஆட்சியரகத்தில் சுதந்திர தின விழா

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து கொண்டு, ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், பல்வேறு அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

error: Content is protected !!