News March 27, 2025
தமிழக வானிலை அறிவிப்பில் இந்தி சேர்ப்பு!

TNல் இதுவரை தமிழ், ஆங்கிலத்தில் மட்டும் வெளிவந்த வானிலை அறிக்கை, தற்போது இந்தி மொழியிலும் வெளியாகியுள்ளது, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் இந்தியா முழுவதும் பிராந்திய மொழி, ஆங்கில மொழியில் வானிலை அறிக்கை வெளிவரும் நிலையில், TNல் மட்டும் இந்தி மொழியுடன் சேர்த்து வெளியாகி உள்ளது. ஏற்கெனவே, இங்கு இருமொழிக் கொள்கை சர்ச்சை நிலவி வரும் நிலையில், இந்தி மொழி சேர்க்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 13, 2025
புலியின் சிறுநீரை விலைக்கு வாங்கும் மக்கள்!

சீனாவில் புலியின் சிறுநீரை விலைக்கு வாங்கிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் பிங்க்பெங்சியா என்ற உயிரியல் பூங்காதான் புலியின் சிறுநீரை விற்பனை செய்கிறது. புலியின் சிறுநீரால் மூட்டு வலி, சுளுக்கு, தசை வலிகள் குணமாவதாக நம்பப்படுகிறது. ஒரு சிறுநீர் பாட்டில் இந்திய மதிப்பில் ₹600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
News August 13, 2025
ICC சிறந்த வீரர்: சரித்திரம் படைத்த சுப்மன் கில்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்ட <<17384015>>கேப்டன் சுப்மன் கில்<<>>, ஜூலை மாதத்தின் சிறந்த ICC வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், 4-வது முறையாக இந்த விருதை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். கில் ஏற்கெனவே, 2023 ஜனவரி, செப்டம்பர் மற்றும் 2025 பிப்ரவரி மாதங்களிலும் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ளார்.
News August 13, 2025
5,180 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

SBI வங்கியில் காலியாக உள்ள 5,180 Junior Associates (கிளார்க்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 380 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 – 28. தேர்வு முறை: முதல்நிலை, முதன்மைத் தேர்வுகள், நேர்காணல். தேர்வுக் கட்டணம்: ₹750. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.26. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <