News March 27, 2025
பேரவையில் நிறைவேறிய தனித்தீர்மானம்!

வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக அரசு கொண்டு வந்த தனித்தீர்மானம் பேரவையில் நிறைவேறியது. முன்னதாக பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து CM ஸ்டாலின் உரையாற்றினார். இதற்கு அதிமுக, புரட்சி பாரதம், தவாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தனித்தீர்மானம் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.
Similar News
News September 18, 2025
போலி பாகிஸ்தான் வீரர்களை திருப்பி அனுப்பிய ஜப்பான்

ஃபுட்பால் வீரர்கள் என்ற பெயரில் தங்கள் நாட்டிற்குள் நுழைய முயன்ற, 22 பாகிஸ்தானியர்களை ஜப்பான் திருப்பி அனுப்பியுள்ளது. வகாஸ் அலி என்பவர் போலியான ஃபுட்பால் கிளப் நடத்தி, அதன் மூலம் பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு, பாகிஸ்தானியர்களை ஜப்பானுக்கு அனுப்புவது தெரியவந்துள்ளது. இதை பாகிஸ்தான் விசாரணை அமைப்பும் உறுதி செய்துள்ளது. கடந்த 2024-லிலும், வாகாஸ் இதேபோல் 17 பேரை ஜப்பானுக்கு அனுப்பியுள்ளாராம்.
News September 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 462 ▶குறள்: தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல். ▶பொருள்: தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.
News September 18, 2025
இந்தியா முழுவதும் நடவடிக்கை: டெல்லியில் இருந்து தொடக்கம்

இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது. அதன் முதல் படியாக, டெல்லியில் இருந்து தொடங்கப்பட உள்ளது. அதன்படி, 2002 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத டெல்லிவாசிகள் அடையாள அட்டையை வழங்குவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், <<17723518>>SIR<<>>-ல் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட் வரும் அக்.7-ம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது.