News March 27, 2025
வக்பு வாரிய மசோதாவுக்கு அதிமுக ஆதரவு

வக்பு வாரிய மசோதாவுக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. பேரவையில் தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக MLA வேலுமணி வக்பு வாரியத்தின் அடிப்படையை தகர்க்கும் வகையில் மசோதா இருப்பதாகவும், 40–க்கும் மேற்பட்ட திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது என்றும் சாடினார். தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக MLAக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Similar News
News August 24, 2025
காதலை பற்றி நடிகை மிருணாள் சொல்வது இதுதான்..!

உண்மையான காதல்தான் தனக்கு முக்கியம் என நடிகை மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார். காதலில் துரோகம் செய்யப்படுமோ என்ற பயம் இருப்பதாகவும், அதேநேரத்தில் காதல் தோல்வியை சந்தித்தாலும் அதனை வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தனுஷும் மிருணாள் தாக்கூரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. தனுஷ் தனக்கு நல்ல நண்பர் என அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.
News August 24, 2025
இப்போ இதான் டிரெண்டாம்!

‘Gen Z’ தலைமுறையிடம் Wall Street நடத்திய சர்வேயில் Loose fit sweatpants தான் தற்போது டிரெண்ட் என கருத்து தெரிவித்துள்ளனர். ஜிம் முதல் கடைத்தெரு வரை பெண்கள் விரும்பி அணியும் லெக்கின்ஸ் பேன்ட் இனி டிரெண்ட்டிங்கில் இருக்காது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு முன் Skinny Jeans-ஐ Millennial Cringe என Gez Z கூறிவந்தனர். நீங்க டிரெண்டிங்கில் இருக்கீங்களா?
News August 24, 2025
MGR-யை விட ஸ்டாலினுக்கு மகளிர் ஆதரவு அதிகம்: KN நேரு

விவசாயத்தில் வேரோடு பிடுங்கி நட்டால் தான் பயிர் நன்றாக விளையும், அதுபோல் திமுக நன்றாக வளர்ந்து வருவதாக அமைச்சர் KN நேரு தெரிவித்துள்ளார். நெல்லையில் பேசிய அவர், அதிமுக – பாஜக கூட்டணியை அந்த கட்சியின் தொண்டர்களே ஏற்று கொள்ளவில்லை என விமர்சித்தார். மேலும், MGR-யை விட, தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் பெண்களின் ஆதரவு CM ஸ்டாலினுக்கு அதிகரித்துள்ளதாக கூறினார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?