News March 27, 2025
பணத்தை இழந்தால் உடனே அழையுங்கள்- எஸ்பி அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 500 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் டிரேடிங், இரட்டை பணம், உள்ளிட்டவற்றில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்” என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
Similar News
News August 7, 2025
நாமக்கல்லில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (08.08.2025) வெள்ளிக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள், நாமக்கல் மாநகராட்சி என்.ஆர.எல் திருமண மஹால், இராசிபுரம் நகராட்சி கிருஷ்ணா மஹால், படவீடு பேரூராட்சி அள்ளிநாயக்கன்பாளையம் சமுதாயக்கூடம், எலச்சிப்பாளையம் மாணிக்கம்பாளையம் சமுதாய நலக்கூடம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News August 7, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கல்லில் இருந்து இன்று இரவு 9:25 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்ல 22652 சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் நாமக்கலில் புறப்படும் நேரம் தினசரி இரவு 9:25 – 22652 பாலக்காடு – சென்னை சென்ட்ரல் ,திங்கள், புதன், வெள்ளி 1:35 AM மணிக்கு 20602 போடி – சென்னை சென்ட்ரல் , திங்கள் காலை 5:05 – 12690 நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் செல்லும் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
News August 7, 2025
நாமக்கல்: டிகிரி போதும்.. புலனாய்வுத் துறையில் வேலை!

நாமக்கல் மக்களே, இந்திய புலனாய்வுத் துறையில் உதவி மத்திய புலனாய்வு(Intelligence Bureau) அதிகாரிக்கு 3,717 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை மாத சம்பளம் வழங்கப்படும். ஏதெனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஆக., 10-ம் தேதிக்குள் இந்த <