News March 27, 2025
எப்படி இருக்கிறது ‘L2: எம்புரான்’? Review & Rating!

குரோஷி ஆப்ரகாமின் கதையை சொல்கிறது ‘L2: எம்புரான்’. பிளஸ்: மோகன்லால் அசத்தி இருக்கிறார். இன்டர்வெல் காட்சி, இரண்டாம் பாதியின் அரசியல் மற்றும் காட்டில் நடக்கும் ஆக்ஷன் பிளாக்கிற்கு பயங்கர கிளாப்ஸ். மேக்கிங் தரமாக உள்ளது. மியூசிக், ஒளிப்பதிவு இரண்டுமே பலம். பிருத்விராஜ் ஸ்டைலிஷான படம் கொடுத்துள்ளார். மைனஸ்: படத்தின் நீளம் கொஞ்சம் ஜாஸ்தி. மெதுவான முதல் பாதி காட்சிகள் சோதிக்கின்றன. Rating: 3/5.
Similar News
News September 17, 2025
எப்போதும் மக்கள் பக்கம் விஜய்.. தவெகவினர் பதிலடி

அரசியலுக்கு வருவதற்கு முன், மக்களுக்காக என்ன செய்தார் விஜய் என NTK உள்ளிட்ட கட்சிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றன. இதற்கு 2016-ல் ஜல்லிக்கட்டு போராட்டம், 2017-ல் தங்கை அனிதா மரணம், 2018-ல் ஸ்டெர்லைட் படுகொலை, 2024-ல் கள்ளச்சாராய இறப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளில் மக்கள் பக்கம் நின்றவர். 2026-ல் ‘People’s only hope’ என விஜய்யின் போட்டோவுடன் தவெகவினர் பதிலடி கொடுக்கின்றனர்.
News September 17, 2025
வெற்றி நெருக்கடியில் பாகிஸ்தான்

ஆசிய கோப்பையில் குரூப் ‘A’-வில் உள்ள பாகிஸ்தான், முதல் போட்டியில் ஓமனை வீழ்த்தியது. ஆனால் 2-வது போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்தது. இதனால், இன்றைய UAE-க்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தோற்றால் அந்த அணி சூப்பர் 4 சுற்று வாய்ப்பை UAE-விடம் பறிகொடுத்துவிடும். குரூப் ‘A’ ஏற்கெனவே இந்தியா சூப்பர் 4-க்கு தகுதி பெற்றுவிட்டது.
News September 17, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.17) சவரனுக்கு ₹80 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,270-க்கும், சவரன் ₹82,160-க்கும் விற்பனையாகிறது. நேற்று(செப்.16) சவரனுக்கு ₹560 அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் சரிவைக் கண்டுள்ளது.