News March 27, 2025

ரயில்வே வேலை: சூப்பர் சம்பளம்

image

இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ, டிப்ளமோ, BE,B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.19,900 சம்பளம் வழங்கப்படும்.

Similar News

News April 2, 2025

மேல்மலையனூர்: கிருத்திகை முன்னிட்டு அங்காளம்மன் வீதியுலா

image

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் இன்று(ஏப்.01) இரவு பங்குனி கிருத்திகையை முன்னிட்டு வீதியுலா உற்சவம் நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேகம் செய்து புத்தாடை உடுத்தி வண்ண மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

News April 2, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (01.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News April 1, 2025

விழுப்புரம்: வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்

image

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு நிர்வாக காரணங்களுக்காக கீழ்காணும் விவரப்படி பணியிட மாறுதல் வழங்கி விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப.,இதன் வழி உத்தரவிட்டுள்ளார். பணிமாறுதல் வழங்கப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உடன் பணியில் சேர்ந்து அறிக்கை அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!