News March 27, 2025
பிரபல ஹாலிவுட் நடிகை மரணத்தில் திடீர் திருப்பம்!

பிரபல ஹாலிவுட் நடிகை சிந்தியானா சாண்டேஞ்சலோ (Cindyana santangelo) மரணத்திற்கு அழகுக்காக செலுத்தப்பட்ட ஊசிகள் காரணமல்ல என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 58 வயதான சிந்தியானா, நேற்று திடீரென உயிரிழந்தார். மிகவும் அழகாக மாற அவர் எடுத்துக் கொண்ட ஊசியே இறப்புக்கு காரணம் எனத் தகவல் பரவியது. 1967இல் பிறந்த நடிகை சிந்தியானா, ‘ER’, ‘Married… With Children’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். #RIP
Similar News
News September 19, 2025
ஆச்சர்யம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சர்யங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறிய வரும்போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.
News September 19, 2025
திமுக, தவெகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

திமுக, தவெக, தேமுதிக, பாமகவில் இருந்து விலகிய 500-க்கும் மேற்பட்டோர் EPS முன்னிலையில் சேலத்தில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். 2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக மாற்றுக்கட்சியினர் பலரையும் கட்சியில் இணைத்து வருகிறது. அதேநேரம், திமுக மீது அதிருப்தி, மகளிர் உரிமைத்தொகை ₹1,000 கிடைக்கப்பெறாதவர்களை அதிமுகவில் இணைக்க நிர்வாகிகளுக்கு EPS புதிய அசைன்மென்டை கொடுத்துள்ளாராம்.
News September 19, 2025
5 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்!

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வரும் 24-ம் தேதி வரை மாநிலத்தில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. அதேபோல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.