News March 27, 2025
ராமநாதபுரத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

ராமநாதபுரம் ஆட்சியர் வளாகத்தில் உள்ளநீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி வகுப்புகள் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது. முதல் தொகுப்பு ஏப்.01 – ஏப்.13, இரண்டாம் தொகுப்பு ஏப்.15 – ஏப்.27, முன்றாம் தொகுப்பு ஏப்.29 – மே11, நான்காம் தொகுப்பு மே.13 – மே.25, ஐந்தாம் தொகுப்பு மே.27 – ஜூன்.8 வரை வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 99766 91417 தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 2, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஏப்ரல்.01) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News April 1, 2025
செகந்திராபாத் – ராமநாதபுரம் வார ரயில் ஏப்.30 வரை நீட்டிப்பு

செகந்திராபாத் – ராமநாதபுரம் (வ.எண் 07695) வாராந்திர ரயில் சேவை புதன் கிழமைகளில் (விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி) வழியாக நாளை (ஏப்.02) முதல் ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் ராமநாதபுரம் – செகந்திராபாத் வாராந்திர ரயில் வெள்ளிக்கிழமைகளில் (வ.எண் 07696) ஏப்.4 முதல் மே 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
News April 1, 2025
பிரதமர் வருகை – மீன் பிடிக்க தடை

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்.6ல் திறந்து வைக்க உள்ளார். இதன் பாதுகாப்பு கருதி மண்டபம் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளுக்கு ஏப். 4, 5, 6ல் மீன்பிடி அனுமதி சீட்டு நிறுத்த கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தல் படி 3 நாட்களுக்கு மீன் பிடி அனுமதிச்சீட்டு நிறுத்தப்படுகிறது. இவ்வாறு மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.