News March 27, 2025

27 பேர் பலியான வெடி விபத்தில் நிவாரணம் வழங்க தாமதம்

image

சாத்துார் அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் 2021 பிப். 12 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 27 பேர் பலியாகினர். இதில் 26 பேர் வரை காயமடைந்தனர். 2022 இல் பசுமை தீர்ப்பாயம் பலியானவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.20 லட்சம், காயமடைந்தவர்களுக்கு சதவீதங்களுக்கு ஏற்ப ரூ.2 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழங்க உத்தரவிட்டது.இந்த உத்தரவை இதுவரை அமல்படுத்தாததால் பாதிக்கப்பட்டோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்

Similar News

News November 1, 2025

புதிய ரவுண்டானவால் கனரக வாகனங்களுக்கு சிக்கல்

image

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் முன்பாக ரெட்டை பாலம் சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைத்து அதில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்படுகிறது. நான்கு சாலைகள் பிரியும் பகுதியில் அமையும் இந்த ரவுண்டானா மிகப்பெரிய அளவில் அமைக்கப்படுவதால் சிவகாசி நகரிலிருந்து வரும் கனரக வாகனங்கள் Gh நோக்கி வலதுபுறம் திரும்புவதில் சிக்கல் ஏற்படும் நெருக்கடி நிலை உள்ளது. எனவே ரவுண்டான அளவை சிறிதாக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News November 1, 2025

பெண் தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம்

image

மகளிர் சுய உதவிக் குழுவில் 2 வருடங்கள் உறுப்பினராக உள்ளவர்கள், வங்கி கடன் பெற்று திரும்ப செலுத்திய அனுபவம் பெற்ற 18- 55 வயதுடைய அனைத்து மகளிரும் பயன்பெறும் வகையில் வங்கிகள் மூலம் 2% வட்டி மானியத்துடன் தொழில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தகுதிவாய்ந்த பெண் தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம் அந்தந்த வட்டார இயக்க மேலாண்மை அலுவலகங்களில் நவ.4 முதல் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 31, 2025

விருதுநகரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் வருவாய் கோட்டங்களில் நவ.11 அன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதவி ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயம், தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு அளித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!