News March 27, 2025
அதிமுகவினருக்கு இபிஎஸ் திடீர் அறிவுறுத்தல்!

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்த தீர்மானத்தை CM ஸ்டாலின் முன்மொழியவுள்ளார். இந்நிலையில், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்பது குறித்து அதிமுக MLAக்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக பேரவையில் அதிமுகவினர் எப்படி செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News December 12, 2025
கோர விபத்தில் 22 பேர் பலி.. PM மோடி இரங்கல்

அருணாசல பிரதேசத்தில் இந்திய – சீன எல்லையில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் டிரக் கவிழ்ந்த <<18533109>>விபத்தில்<<>> 22 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ₹2 லட்சம் & காயமடைந்தோருக்கு ₹50 ஆயிரமும், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் மோடி அறிவித்துள்ளார்.
News December 11, 2025
விரைவில் தவெகவில் அதிமுக முக்கிய தலைவர்கள்: KAS

ஜனவரிக்குள் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய தலைவர்களை தவெகவில் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்று செங்கோட்டையன் சூளுரைத்துள்ளார். மேலும், தற்போது தவெகவை பலப்படுத்தும் பொறுப்பு தன்னுடையது என்றும் தெரிவித்துள்ளார். மா.செ.,க்கள் எந்த பிரச்னையாக இருந்தாலும் தன்னை தொடர்புகொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். யாரை தவெகவுக்கு அழைத்து வருவார் KAS?
News December 11, 2025
ரயிலில் இரவு 10 – காலை 6 மணி ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க!

*இரவு 10 – காலை 6 மணி வரை மட்டுமே மிடில் பெர்த்தை (Tier 3 AC, Sleeper) உபயோகிக்க வேண்டும்.
*ஷார்ட் சர்கியூட்டை தவிர்க்க இரவு 11 – காலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்ட்கள் ஆஃப் செய்யப்படும்.
*இரவு 10 மணிக்கு மேல் அதிகமான சத்தத்துடன் பேசவோ, பாடல் கேட்கவோ கூடாது.
*மின் விளக்குகளை ஆஃப் செய்ய வேண்டும்.
*இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் ஏறினால் மட்டுமே, உடனடியாக உங்கள் டிக்கெட்டை TTE செக் செய்ய முடியும்.


