News April 2, 2024
சர்வதேச சதுரங்கப்பட்டியலில் இடம் பெற்ற நாகை மாணவி

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வாய்மேடு பகுதியைச் சேர்ந்த மணிமொழி, கவிதா தம்பதியினரின் மகள் மகதி சர்வதேச சதுரங்க பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 9 ஆம் வகுப்பு பயிலும் இவர் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்றுள்ளார். மேலும், இவர் நாகை மாவட்ட அளவில் சர்வதேச சதுரங்கப்போட்டியில் இடம்பெற்ற முதல் பெண் சதுரங்க ஆட்டக்காரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 5, 2025
நாகை: குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 !

நாகையில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ், மாதம் ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் அல்லது நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க.!
News August 5, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை ஆகியவற்றை பெற்றிட தகுதிவாய்ந்த நபர்கள், அதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிடம் பெற்று கொண்டு, உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப .ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
கோரக்க சித்தர் கோயிலின் சிறப்பு பூஜை

நாகை மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூர் அருகே உள்ள புகழ்பெற்ற கோரக்க சித்தர் கோயிலில் இன்று இரவு அன்னக்காவடியை தோளில் சுமந்து சென்று, தானம் பெறப்பட்டு, பின் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்தநிகழ்வில் பலர் கலந்து கொண்டு சித்தர் ஆசியை பெற்றனர்.