News March 27, 2025
ராணுவத்தில் வேலை: கலெக்டர் அறிவிப்பு

இந்திய ராணுவத்தில் 2025-26ஆம் ஆண்டிற்கான ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், கிளர்க்/ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் (10வது), டிரேட்ஸ்மேன் (10வது), டிரேட்ஸ்மேன் (8வது) ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பிற்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த திருமணமாகாத ஆண்கள் ஏப்.10 வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
ஈரோடு: What’sApp-ல் வரும் ஆபத்து

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை What’s App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்த துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News November 2, 2025
ஈரோடு: ஆதார் அட்டையில் திருத்தமா?

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)
News November 2, 2025
ஈரோடு: தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை

ஈரோடு ராசாம்பாளையம் தென்றல்நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த இவர் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இருந்தார். திருமணம் ஆகாத விரக்தியிலும், கடன் சுமையாலும் அவதிப்பட்டு வந்த சதீஷ்குமார் வீட்டில் இருந்தபோது தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


