News March 27, 2025
டெபாசிட் வட்டியை குறைக்கும் வங்கிகள்

ஏப்ரல் மாதம் முதல் டெபாசிட் பணத்துக்கான வட்டியை குறைக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன. கடந்த மாதம், ரிசர்வ் வங்கி, ரெபோ வட்டியை குறைத்தது. இதனையடுத்து, லோன்களுக்கான வட்டியை குறைத்த வங்கிகள் டெபாசிட் வட்டியில் மாற்றமில்லாமல் வைத்திருந்தன. இதனால், வங்கிகளின் லாபம் குறைவதால், அடுத்த மாதம் முதல் டெபாசிட் வட்டியை குறைக்கத் திட்டமிட்டுள்ளன. இதனால், மக்களின் FDக்கான வட்டி குறையும்.
Similar News
News November 6, 2025
BREAKING: SIR-க்கு எதிராக திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை (SIR) எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் நவம்பர் 11-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே SIR. பணிக்கு எதிராக தமிழக CM உள்பட, திமுக கூட்டணி தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
News November 6, 2025
நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உங்கள் தினசரி உணவில் நெய் சேர்க்குறீங்களா? தினமும் நெய் சாப்பிடுவது நல்லது. ஆனால் அளவு முக்கியம்! 1–2 டீ ஸ்பூன் நெய் ஒரு நாளைக்கு போதும். உணவுடன் சேர்த்து எடுத்தால் மிகவும் நல்லது. நெய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து தெரிஞ்சுகோங்க. உங்களுக்கு நெய் சாப்பிட பிடிக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க!
News November 6, 2025
Business Roundup: அனில் அம்பானிக்கு ED சம்மன்

*இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன *வரும் 14-ம் தேதி நேரில் ஆஜராக அனில் அம்பானிக்கு ED சம்மன் *₹4 கோடி வருமான வரித்துறை வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சாதகமான தீர்ப்பு *பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்த நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு வங்கிகள் சங்கம் கண்டனம் *வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் மின்விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


