News March 27, 2025
நெட் இல்லாமலும் UPI பரிவர்த்தனையை செய்யலாம்!

கடைக்கு சென்று ஏதாவது வாங்கிய பிறகு, திடீரென நெட் வேலை செய்யாது. கையிலும் பணம் இல்லாமல், தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாவோம். இனி, அந்த கவலை வேண்டாம். போனில் *99# என டயல் செய்யுங்கள். மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள பேங்கின் தகவல் வரும். அந்த மெனுவில் பணம் அனுப்ப, பேலன்ஸ் பார்க்க, பணம் பெற என்ற ஆப்ஷன்கள் வரும். பேங்க்கின் பின் நம்பரை போட்டு, பரிவர்த்தனைகளை எளிதாக செய்யலாம். SHARE IT.
Similar News
News September 17, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 17, 2025
MGR-ன் இலக்கில் நாங்கள்: நயினார்

தமிழக பாஜகவின் குழு கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான பிரச்னைகள் பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டதாகவும், கூட்டணி தொடர்பான எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக இருக்கக்கூடாது என்ற MGR-ன் எண்ணத்தையே அனைத்து எதிர்கட்சிகளும் நினைப்பதாகவும், அதற்கான வேலையில் NDA கூட்டணி இறங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News September 17, 2025
Netflix தளத்தில் இருந்து குட் பேட் அக்லி படம் நீக்கம்

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில், இளையராஜாவின் இசையில் உருவான 3 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதை தன் அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி ராஜா தொடர்ந்த வழக்கில், பாடல்களை பயன்படுத்த HC இடைக்கால தடை விதித்தது. ஆனாலும் தொடர்ந்து பாடல்கள் பயன்படுத்தப்பட்டதால், தயாரிப்பு நிறுவனத்துக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், Netflix தளத்தில் இருந்து GBU படம் நீக்கப்பட்டுள்ளது.