News March 27, 2025
வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனி வியாபாரிகள், வணிகா்கள் தா்ப்பூசணி, மாம்பழம், வாழைப்பழம் போன்ற கனிகளை செயற்கை வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யக் கூடாது. கனிகளை விற்பனை செய்வோர் சட்ட விதிகளைப் பின்பற்றி உணவு வணிகத்தில் பதிவு அல்லது உரிமம் பெற்று காய்கனிகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.
Similar News
News October 27, 2025
கிருஷ்ணகிரி: ரூ.30,000 சம்பளத்துடன் அரசு வேலை

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். ஆரம்பக்கட்ட சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அக்.29-ம் தேதிக்குள்<
News October 27, 2025
பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

பையூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெற்றி நிச்சயம் என்ற திறன் பயிற்சி மூலம் பட்டுப்புழு வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது. முதன்மை அலுவலர் அனிஷாராணி, பேராசிரியர் மங்கம்மாள் இதனை சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிட்டனர். இதற்கு +2 முடித்தவர்கள் 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் டிச.2 தேதி வரை பயிற்சி நடைபெற உள்ளது. விவரங்களுக்கு 9597956268 எண்ணிற்கு அழைக்கவும்.
News October 27, 2025
கிருஷ்ணகிரி: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


