News March 27, 2025
தங்கம் ‘டெபாசிட்’ திட்டம் நிறுத்தம்

தங்கத்தை வங்கியில், ‘டெபாசிட்’ செய்து வட்டி வருமானம் ஈட்டும், தங்க முதலீட்டுத் திட்டத்தை நேற்று முதல் நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் 1-3 வரை குறுகிய காலம்; 5-7 ஆண்டுகள் வரை நடுத்தர காலம்; 12 – 15 ஆண்டுகள் வரை நீண்ட காலம் என 3 விதமாக செயல்படுத்தப்பட்டது. இதில் நடுத்தர, நீண்ட கால திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குறுகிய கால திட்டத்தைத் தொடர மத்திய அரசு அனுமதித்துள்ளது.
Similar News
News April 1, 2025
அமித்ஷா சொன்னது காமெடி: திருமாவளவன்

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் என அமித்ஷா கூறியது நகைச்சுவை என திருமாவளவன் விமர்சித்துள்ளார். பாஜக கூட்டணியால் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியாது என்பது அமித்ஷாவிற்கே தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் காலம் இன்னும் கனியவில்லை எனவும் திராவிடக் கட்சிகள் பலவீனமடையும்போது அதற்கான கோரிக்கை வலுக்கும் என்றும் திருமா தெரிவித்துள்ளார்.
News April 1, 2025
எம்புரான் படத்துக்கு தடைகோரி கேரளா ஐகோர்ட்டில் வழக்கு

மோகன்லாலின் எம்புரான் படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது. இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில், 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. நடிகர் மோகன்லால் வருத்தமும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எம்புரான் படத்தை வெளியிட தடை கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி வழக்குத் தொடர்ந்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
News April 1, 2025
பெண்ணை 3 மணிநேரம் கதற கதற… மிருகமான மனிதர்கள்

ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்த கூட்டு பலாத்காரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை தொடர்ந்து 3 மணிநேரம் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது ஒரு கும்பல். அப்போது அப்பெண், தாகம் எடுக்கிறது, தண்ணீர் கொடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். ஆனால், இந்த காமுகர்கள், தண்ணீர் கொடுக்காமல், அப்பெண்ணின் வாயில் சிறுநீர் பெய்திருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?